எண்ணத்தின் வலிமை

தமிழில் தோன்றிய தத்துவஞானி யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
அவர்கள் அருளியது

எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்”. 
எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். 
தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது. 
அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 
இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம். 

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது. 
நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன. 

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும். 
எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது? 

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். 
இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Share:
Read More

இலங்கை பிரச்சனையை யார் தான் நீதி வழுவாமல் கையாளகூடியவர் ?


ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது .வழமைபோலவே காங்கிரஸ் இலங்கை எமது நட்பு நாடு என்று சொல்கிறார் .அத்துடன் சுப்பிரமணிய சுவாமி போன்றோரை இலங்கைக்கு அனுப்பி தமிழருக்கு எதிராக இரகசிய சதியை செய்துள்ளது இறைய காங்கிரஸ் அரசு .
                                  இலங்கை பிரச்சனையில் எந்த ஒரு நாடும் இதய சுத்தியுடன் நீதியின் வழி நின்று பிரச்னையை கையாளவில்லை என்பது வெளிப்படை உண்மை .காண்க உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது.இந்  நிலையில் யார் தான் நீதி வழுவாமல் பிரச்னையை கையாளகூடியவர் ?  கத்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே .
          இரண்டு  தனி மனிதன் கொல்லபட்டத்துக்கு  நீதி வழங்க தேவன் இறங்கி வந்து நீதியை வழங்கிய  இரண்டு  சம்பவங்களை தருகிறேன்.

1) காயின்  ஆபேலை கொன்றது 
காண்க 


தொடக்கநூல்
அதிகாரம் 4.
6.    ஆகவே, ஆண்டவர் காயினிடம், "நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்?
7.    நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடங்கி ஆளவேண்டும்" என்றார்.
8.    காயின் தன் சகோதரன் ஆபேலிடம், "நாம் வயல்வெளிக்குப் போவோம்" என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான். 
9.    ஆண்டவர் காயினிடம், "உன் சகோதரன் ஆபேல் எங்கே?" என்று கேட்டார். அதற்கு அவன், "எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?" என்றான்.
10.   அதற்கு ஆண்டவர், "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. 
11.   இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்.
12.   நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்" என்றார்.
13.   காயின் ஆண்டவரிடம், "எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது. 


2) தாவீது அரசன் உரியாவின் மனைவி மீது இச்சை கொண்டு அவளை தனது மனைவி ஆக அடைய போர் தர்மத்தை மீறி சதி செய்து உரியாவை 
கொன்றது .
காயின்  ஆபேலை கொன்றது படைப்பின்  தொடக்கத்தில் தேவன் ஆபேல் 
கொலைக்கு  நீதி வழங்கியதை பார்த்தோம் .ஆபேல் கொலை நடந்து  ஆயிரம் ஆண்டுகட்கு பின்னர் தாவீது அரசன் உரியாவை 
கொன்றது . வருகின்றது.
                                             தாவீது ஒரு சாதாரண மனிதன் அல்ல இஸ்ரவேலின்
அரசன் இதைவிட தேவனின் செல்ல பிள்ளை .இந்த சந்தர்பத்தில் இன்றைய இந்திய அரசு  கூறுவது போல(( இலங்கை எமது நட்பு நாடு எனவே இலங்கை செய்வதை காங்கிரசை போல கண்டுகொள்லாமல் இருக்க பழகுங்கள் என்று தமிழ் நாட்டை வற்புறுத்தி வருகின்றது. .))இதே போல 
தாவீது ஒரு சாதாரண மனிதன் அல்ல இஸ்ரவேலின் 
அரசன் அதைவிட எனக்கு மிகவும் பிரியமான மகன் நடந்த கொலை எனக்கு மட்டுமே தெரியும்  எனவே நான் இதை கண்டு கொள்ளாமல் இருப்பேன் என்று தேவன் எச் சந்தர்பத்திலும் சொல்லவும் இல்லை அதற்காக தாவீதை நீதி விசாரிக்காமல் இருக்கவும் இல்லை இச்சம்பவம் நமது தேவன் என்றென்றும் மாறாத தேவன் என்பதையும் அவர் எப்போதும் நீதியை நிலை நாடுகின்றார் என்பதற்க்கு வலுவான சாட்சி .
காண்க


10. உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.

11. உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.

12. அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான்.

13. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.

14. காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.

15. அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.

16. அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.

17. பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாபோடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள்; ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.

26. தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள்.

27. துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.
                            
                            II சாமுவேல்12 அதிகாரம்

1. கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள்; ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

2. ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.

3. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.

4. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான்.

5. அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப்பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

6. அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.

7. அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

8. உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.

9. கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.

10. இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.

11. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.

12. நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.

13. அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.

14. ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.


15. அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.


எனவே என்றும் நீதி மாறாத அந்த உண்மை இறைவனிடம் நடந்த கொலைகளுக்கா நிதிவேண்டி செபிப்பது ஒவ்வொரு தமிழ் கிறிஸ்த்தவர்களுக்கும் காலம் இட்ட பணி இதை நிறைவேற்றும்  போது கண்டிப்பாக தேவன் வாருவார். இலங்கை தமிழருக்கு  நீதி வழங்குவார் .இதை உலகில் உள்ள எந்த அரசாலும் தடுக்கமுடியாது .என்னெனில் நம் தேவன்  நமது தேவன் என்றென்றும் மாறாத தேவன் என்பதையும் அவர் எப்போதும் நீதியை நிலை நாடுகின்றார் 
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.
Share:
Read More

புதிய அரசியல் யாப்பு : தமிழரை அழிக்கவல்லது மட்டுமல்ல சீன ஆதிக்கத்திற்கு ஆதாரமானதுமாகும் – மு. திருநாவுக்கரசு

ஏதிரியின் தொழில் அழிப்பதென்பதுதான். அதனை வெட்டியோ கொத்தியோ,  ஆடியோ, பாடியோ, புகழ்ந்தோ, இகழ்ந்தோ, அணைத்தோ, ஆராத்தியோ. கையில் வாளேந்தியோ அல்லது தோளில் கைபோட்டோ எப்படியாயினும் அழித்தல் என்பதுதான் எதிரியின் பிரதான இலக்கும் தொழிலுமாகும்.

இன்றைய நிலையில் பெரும் சிந்தனை மாற்றம் ஒன்று ஏற்படாமல், ஓர் அறிவியல் புரட்சி ஏற்படாமல் தமிழ் மக்களின் வாழ்வில் விடிவேற்பட வாய்ப்பில்லை. வரலாற்றில் இருந்து தமிழ்த் தலைமைகள் நல்ல பாடங்களைக் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை மாறாக எதிரியால் வென்றெடுக்கப்படுபவர்களாயும் இறுதி அர்த்தத்தில் தம்மை நம்பிய மக்களுக்கு தோல்விகளையே பரிசளிக்க வல்லவர்களாயுமே காணப்படுகின்றனர்.

ஓர் அரசியல் யாப்பிற்குரிய உள்ளடக்கத்தை புரிந்து கொள்வதிலிருந்தும,; அந்த யாப்பு கொண்டிருக்கவல்ல இலக்கை கண்டறிவதிலிருந்துமே ஒரு யாப்பைப் பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும். இன்று நல்லாட்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் அரசியல் யாப்பை அத்தகைய அடிப்படையில் இருந்து ஆராய்ந்து அறியவேண்டியது அவசியம்.

1931ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்பு உருவான காலகட்டத்தில் பொதுவாக தமிழ்த் தலைவர்கள் அதனை எதிர்த்தனர். அப்போது சிங்கள-பௌத்த தலைவராக இருந்த பரண் ஜெயதிலக ஓர் இலகுவான சூத்திரம் ஒன்றை முன்வைத்தார். அதாவது “தமிழர் டொனமூர் யாப்பை எதிர்ப்பதால் அந்த யாப்பை சிங்களவர் ஆதரிக்க வேண்டும்” என்பதே அந்த சூத்திரமாகும். தமிழர் எதை ஆதரிக்கின்றார்களோ அதை எதிர்க்க வேண்டும்  அவர்கள் எதை எதிர்க்கிறார்களோ அதை ஆதரிக்க வேண்டும் என்பதே அவரது இனவாதம் சார்ந்த அரசியல் சமன்பாடும், சூத்திரமுமாக நடைமுறை பெற்றது.

1947ஆம் ஆண்டு சோல்பரி யாப்பு உருவான காலத்தில் சிங்கள மக்களுக்கு சிறந்த இரண்டு தலைவர்கள் கிடைத்தார்கள். ஒருவர் டி.எஸ்.செனநாயக்க மற்றவர் டி.எஸ்.செனநாயக்கவின் மூளையாக செயற்பட்ட சேர். ஓலிவர் குணதிலக ஆவார்.
டொனமூர் காலம் குடியேற்றவாத ஆதிக்கத்திற்குரிய சகாப்தமாக இருந்தது. ஆதலால் குடியேற்ற ஆதிக்கத்தை இந்துமாகடலில் நிலைநிறுத்துவதற்குப் பொருத்தமாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தைப் பேண வேண்டியது அவசியமாய் இருந்தது.இந்திய எதிர்ப்புவாதத்தின் பின்னணியில் சிங்களவர்களை அணைப்பதன்மூலம் அந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இலங்கையை தமக்கு சாதகமாக பேணலாம் என்பதால் அதற்கேற்ப பெரும்பான்மை இனநாயகத்திற்கு வாய்ப்பான அரசியல் யாப்பை டொனமூர் உருவாக்கினார்.

சோல்பரி யாப்புக் காலம் குடியேற்ற ஆதிக்கம் முடிவடைந்து நவகுடியேற்ற ஆதிக்கம் தொடங்கிய காலம். ஆதலால் சுதந்திரம் அடையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை அரசியல் இராணுவ ரீதியில் தமது சார்ப்பு நாடாக வைத்திருக்க வேண்டிய அவசியம் பிரித்தானியருக்கு இருந்தது. இந்நிலையில் இந்திய எதிர்ப்புவாத அச்சத்தை சிங்களத் தலைவர்களிடம் முன்னிறுத்தி பெரும்பான்மை இனமான சிங்கள  பௌத்தர்களை திருப்திபடுத்தவல்லதான நாடாளுமன்ற முறையிலான பெரும்பான்மை இனநாயகத்தை உறுதிப்படுத்தும் யாப்பை சோல்பரி உருவாக்கினார்.

அதேவேளை இன, மதம் சார்ந்த பிரச்சனைகள் நவீன இலங்கையின் அரசியலில் பெரிதும் தலையெடுத்திருந்ததை பிரித்தானியர் கண்கூடாக கண்டிருந்தனர். நவீன இலங்கையின் வரலாற்றில் முதலாவது இனக்கலவரம் 1883ஆம் ஆண்டு சிங்கள கிறிஸ்தவர்களுக்கு எதிராக பௌத்தர்களால் நடத்தப்பட்ட கலவரமாக அமைந்தது. அடுத்து 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட கம்பளைக் கலகம் அமைந்தது.

மேலும் தமிழ் – சிங்கள முரண்பாடு இலங்கை அரசியலில் நீக்கமற இருந்தமை வெளிப்படையானது.  கிறிஸ்தவர்களாக காணப்பட்ட சிங்கள அரசியல் குடும்பங்கள் அனைத்தும் பௌத்தர்களாக மாறாமல் அரசியல் செய்ய முடியாத யதார்த்தம் சோல்பரி காலத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.

இவ்வகையில் பரண் ஜெயதிலக குடும்பம், S.W.R.D.பண்டாரநாயக்க குடும்பம்; D.S.செனநாயக்க குடும்பம், ஓலிவர் குணதிலக குடும்பம் சேர். ஜோன் கொத்தலாவல குடும்பம் வில்லியம் கோபல்லாவ குடும்பம், ஜே.ஆர்.ஜெயவர்த்தன குடும்பம் என்ற அனைத்து சிங்களத் தலைவர்களின் குடும்பப் பெயர்கள் கிறிஸ்தவ பெயர்களையே கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கது. ஆனால் இக் கிறிஸ்துவக் குடும்பங்கள் எல்லாம் பௌத்தத்தை நோக்கி மதம் மாறும் போக்கை பிரித்தானியர்கள் கவலையுடன் நோக்கத் தவறவில்லை.

தமிழர் பக்கம் இத்தகையப் போக்கும் இல்லையென்பது மகிழ்ச்சிக்குரியது. ஆதலாற்தான் ஒரு கிறிஸ்தவரான S.J.V.செல்வநாயகத்தால் 30 ஆண்டுகளாக “தந்தை” என்ற  மகுடத்துடன் தமிழ் மக்களுக்குத் தலைவராக இருக்க முடிந்தது. இப்போக்கை பிரித்தானியர் சரிவர புரிந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை.
இப்பின்னணியில் கிறிஸ்தவர், முஸ்லிம், தமிழர் என்ற அனைவரையும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் சிறுபான்மை இனங்களைப் பாதுகாப்பதற்கான 29ஆவது பிரிவை அரசியல் யாப்பில் சோல்பரி உருவாக்கினார்.

அத்துடன் இரண்டாவது சபையான செனட் சபையை உருவாக்கியதிலும் சிறுபான்மையினரின் உரிமைக்கான பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் பிரித்தானியர்கள் உருவாக்கிய பெரும்பான்மை இனநாயக அரசியல் யாப்பு மரபானது அவர்கள் விரும்பிய 29வது பிரிவையும் செனட் சபையையும்; இலகுவாக விழுங்கி ஏப்பமிட்டது.

1972ஆம் ஆண்டு உருவான அரசியல் யாப்பு இருவகை இனவாத விருத்தியைக் கொண்டு அமைந்தது. முதல் இரண்டு அரசியல் யாப்பையும் உருவாக்கிய பிரித்தானியர்களின் பிரதான இலக்காக கேந்திர நலன் அமைந்திருந்தது. அந்த கேந்திர நலனை பிரித்தானியருடன் பரிமாறிய அதேவேளை தமக்கான பௌத்த பேரினவாத ஆதிக்கத்தை நாணயத்தின் மறுபக்கமென சிங்களத் தலைவர்கள் வெற்றிகரமாக இணைக்கத் தவறவில்லை.

இப்பின்னணியில் இலங்கையின் அரசியல் யாப்பு வளர்ச்சி என்பது முதலாவது குடியரசு அரசியல் யாப்பில் பெரிதும் பௌத்த இனவாத நலன்கள் முதன்மைப்படுத்தப்படுவதாகவும் ஏனைய இனங்கள் பின்தள்ளப்படுவதுமான இருநிலை வளர்ச்சிப் போக்கு காணப்பட்டது.

பண்டாரநாயக்க குடும்பத்தினர் தமது குடும்ப அரசியல் பரிமாணத்திற்கு ஊடாக ஒருபுறம் தம்மை இந்தியாவின் நண்பர்களாக காட்டிக் கொண்டு மறுபுறம் சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தையும் தமிழருக்கு எதிரான இன ஒடுக்குமுறையையும் அரங்கேற்றும் தந்திரத்தைப் பின்பற்றினர். 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பு இத்தகைய மூலோபாயத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.

சிறுபான்மை இனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக சொல்லப்பட்ட 29ஆவது பிரிவு 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் நீக்கப்பட்டது. அத்துடன் இரண்டாவது சபையான செனட் சபை நீக்கப்பட்ட ஒருசபை ஆட்சிமுறை கொண்ட அரசியல் யாப்பாக அமைந்தது. ஒருசபையைக் கொண்ட ஒற்றையாட்சி என்பது மேலும் சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இலகுவானதாக அமைந்தது.

மேற்படி இருவிடயங்களிலும் அரசியல் யாப்பு வளர்ச்சியடைவதற்குப் பதிலாக அது தேய்வடைந்தது. அதேவேளை பௌத்த பேரினவாதம் யாப்பில் தெளிவாக முன்னிறுத்தப்பட்டது. இதன்படி பௌத்தம் இலங்கையின் முதன்மையான மதம் என்றும் அதனைப் பேணிப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் அரசின் கடமையும் பொறுப்பும் என்றும் வரையப்பட்டது.

1978ஆம் ஆண்டு ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட 2வது குடியரசு அரசியல் யாப்பானது மேற்படி சிங்கள-பௌத்த ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி தமிழின அழிப்பை முன்னெடுக்கவல்ல யாப்பாக அமைந்தது. முதலாவது குடியரசு அரசியல் யாப்பு சட்டவாக்க சபை வாயிலான இன ஆதிக்கத்தை உறுதிப்படுத்;தியது. ஆனால் 2வது குடியரசு அரசியல் யாப்பானது நிர்வாக வகையில் நிறைவேற்ற அதிகாரம் சார்ந்த இன ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி இராணுவ ஆதிக்கத்தை நோக்கி வளர்வதற்கான நிலைமையை தோற்றுவித்தது.

நிர்வாக அர்த்தத்தில் ஜனாதிபதி ஏகப்பட்ட அதிகாரங்களுடன் இன ஒடுக்குமுறை செய்யவல்ல சர்வாதிகாரிக்குரிய அதிகாரங்களைக் கொண்டவரானார். 1977ஆம் ஆண்டு ஜெயவர்த்தன பதவியேற்கும் போது இலங்கை இராணுவம் 8000 ஆயிரம் படையினரைக் கொண்ட ஒரு சம்பிரதாயபூர்வ இராணுவமாகவே இருந்தது. ஆனால் அவர் 1979ஆம் ஆண்டு உருவாக்கிய “பயங்கரவாத தடைச்சட்டத்தின்” கீழான இராணுவ ஆட்சி கட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இலங்கை இராணுவம் தமிழருக்கு எதிரான யுத்தம் புரியும் நிறுவனக் கட்டமைப்பைக் கொண்டதாக மாறியது.தமிழின எதிர்ப்பின் அடிப்படையில் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த பாரீய இராணுவ கட்டமைப்பை வளர்த்து இன்று 3 இலட்சம் படையினர் என்ற வகையில் அது பெருகியுள்ளது. அத்துடன் அந்த இராணுவத்தின் ஆடுகளமாக தமிழ் மண்ணே தொடர்ந்தும் காணப்படுகிறது.

இந்த யாப்பின் கீழ்தான் இராணுவம், புலனாய்வுத்துறை, S.T.F. எனப்படும் விசேட படைப்பிரிவு மற்றும் பொலிஸ், பொலிஸ் புலனாய்வுத்துறை என்பனவெல்லாம் தமிழின எதிர்ப்பின் பேரால் அசுர வேகத்தில் விருத்தியாகின.
இவ்வகையில் 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பானது இரத்தம் சிந்தும் இன ஒடுக்குமுறைக்குப் பொருத்தமான நிர்வாக மற்றும் இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்களை ஏற்படுத்திய யாப்பாக பரிணாமம் பெற்று அது இலங்கையின் அரசியலில் நீக்கமற கலந்துவிட்ட ஒரு யதார்தமாகக் காணப்படுகிறது.

இத்தகைய சர்வாதிகார மற்றும் இராணுவ புலனாய்வு சார்ந்த அரசியல் இன ஒடுக்குமுறையின் வடிவில் விருத்தியடைந்து இவை இலங்கையின் அரசியலில் பலமான அங்கங்களாகிவிட்டன. இத்துடன் ஏற்கனவே வளர்ந்து வந்த பௌத்த நிறுவன அரசியல் ஆதிக்கமும் இணைந்து இலங்கையின் அரசியலை இன ஒடுக்குமுறைக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு யதார்த்தபூர்வமான கட்டமைப்பாக உருவாக்கிவிட்டன. இக்கட்டமைப்பின் கீழ்த்தான் இலங்கையில் தமிழ் மக்களை அரசால் இரத்தம் தோய்ந்த பேரழிவிற்கு உள்ளாக்க முடிந்தது.

இவற்றை நிராகரிக்கவல்ல ஒரு புதிய  அரசியல்யாப்பை சிங்கள ஆட்சியாளர்கள் இனிமேல் ஏற்படுத்தப் போவதில்லை. அவர்களால் அப்படி அது முடியவும் மாட்டாது. இந்நிலையில் மகாசங்கத்தினரதும், இராணுவத்தினதும் கட்டளையை மீறி ஜனாதிபதிகளினாலோ, பிரதமரினாலோ, அமைச்சர்களினாலோ செயற்பட முடியாது என்ற வளர்ச்சி நிலை ஏற்பட்டு விட்டது. எனவே தோற்றப்பாட்டடில் உள்ள அரசியல் யாப்பிற்கு அப்பால் செயல் பூர்வமான அர்த்தத்தில் மகாசங்கத்தினரும், இராணுவத்தினருமே உண்மையான அரசியலதிகாரம் கொண்ட அரசியற் சக்திகளாவர்.

நல்லாட்சி அரசாங்கம் என்பதின் பேரில் தமிழ் மக்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்த ஒரு புதிய அரசியல் யாப்பின் வாயிலாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், படுகொலைகளுக்கு அரசியல் தீர்வுகாணும் வகையிலான யாப்பு உருவாக்கப்படும் என்று சிறிசேன  ரணில் – சந்திரிக உட்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் தூண்களும், அவர்களுடன் கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தன.

அதன் படி போர்க்குற்ற விசாரணை, காணாமல் போனோருக்கான நீதி என்பனவும் வானைப் பிளக்கவல்ல உறுதிமொழிகளாக எழுந்தன. ஆனால் உயர்நிலை தளபதிகள் முதல் அடிநிலை இராணுவ வீரன் வரை எந்தொரு படையினரையும் உலகில் உள்ள எந்த நாட்டவரும் கைது செய்ய அனுமதிக்க மாட்டேன் என்றும் யுத்தக் குற்றச்சாட்டில் இருந்து படையினரை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் பலமாக உள்ளதென்றும், பலவாறாக ஜனாதிபதி சிறிசேன பிரகடனம் செய்யும் நிலையில் இந்த புதிய அரசியல் யாப்பு தமிழர்களுக்கான எத்தகைய நீதிக்கும் நியாயமான தீர்விற்கும் இடமில்லை என்பது புலனாகிறது.

இந்தவகையில் இலங்கையின் அரசியல் யாப்பு வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இந்த புதிய யாப்பின் உள்ளடக்கம் என்ன என்பதே பிரதான கேள்வியாகும்.
நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் இலங்கை அரசும், இலங்கை ஆட்சியாளர்களும், இலங்கை இராணுவமும் அபகீர்திக்கும், நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளது.

இந்த அபகீர்த்தியில் இருந்து தம்மை தற்காத்து அரங்கேற்றிய இனப்படுகொலையால் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட காயங்களை ஆற்றி அந்த  இனப்படுகொலையை வெற்றியாக மாற்றுவதற்கு “நல்லாட்சி” என்ற ஒரு ஆயுதத்ததை ஒரு கருவியாக கையில் ஏந்தினர். நல்லாட்சி. நல்லிணக்கம் என்பன மேலும் இன ஒடுக்குமுறை முன்னெடுப்பதற்கான  புதிய வடிவங்களேயாகும்.
நல்லாட்சி, நல்லிணக்கம் என்பனவற்றின் ஓர் அங்கமாக புதிய யாப்பு பற்றிய விடயமும் முன்வைக்கப்படுகிறது.

சர்வதேச அரங்கில் தமக்கு ஏற்பட்டுள்ள அவமானங்களைக் களையவும், நெருக்கடிகளை தீர்க்கவும் ஏற்றவகையில் ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் நிர்வாக நிறுவனமட்டங்களிலான நடவடிக்கைகள் என்பனவற்றைக் காட்டி குறிப்பாக மேற்குலகின் ஆதரவைப் பெறுவது அதன் ஓர் இலக்காக உள்ளது. இவை இனப்பிரச்சனைக்கான  தீர்வல்ல. வெறும் மனிதஉரிமைகள் பிரிச்சனையல்ல தமிழர்களின் பிரச்சனை.

அது ஆழமான தேசிய இனப்பிரச்சனையாகும். ஆனால் ஒரு மனித உரிமைகள் சார்ந்த விடயங்களை யாப்பில் உருவாக்குவதாக காட்டிக் கொண்டு அதனை ஒரு ஜனநாயக மீட்சி என்றும் அது தமிழ் மக்களுக்கான உரிமை வழங்கல் என்றும் அரசாங்கம் தன்னை சோடனை செய்வதற்கான தேவை இந்த யாப்பில் பூர்த்தி செய்யப்பகிறது. இங்கு இனப்பிரச்சனைக்கு தீர்வோ, நியாயமோ, நீதியோ கிடையாது. பழைய 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆனால் அதற்குக் குறைந்த வடக்கு-கிழக்கு இணைப்பற்ற தீர்வை இந்த யாப்பில் அரசாங்கம் முன்வைக்கிறது..

சாப்பாட்டுக் கடைகள் சிலவற்றில் நேற்றை பழங்கறிகளை ஒன்றாகச் சேர்த்து புதிதாக சில பூசணிக்காய் துண்டுகளை அதனுடன் சேர்த்து பழங்கறியை புதிய சாம்பாராக ஆக்குவது போல இந்த புதிய அரசியல் யாப்பும் பழங்கறிகளைக் கொண்ட ஏமாற்றுகரமான ஒரு புதிய சாம்பாராகும்.

மகாசங்கத்தினர் புதிய அரசியல் யாப்பிற்கான அவசியம் எதுவும் இல்லை என்று ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் புதிதென்று எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட இனப்படுகொலை வடுவில் இருந்து தம்மை தற்காப்பதற்கு புதியதாக பழைய கறியுடன் சில புதிய பூசணிக்காய் துண்டுகளை கலந்துள்ளார்கள். இது உலகத்தை ஏமாற்றுவதற்கான வித்தை. இனப்பிரச்சனை அடிப்படையில் இதற்கு எந்தப் பெறுமானமும் கிடையாது.

அத்துடன் 2005ஆம் ஆண்டைத் தொடர்ந்து இனயுத்தத்தின் பேரால் சீனா இலங்கை அரசிற்கு பேருதவி புரிந்தது. 21ஆம் நூற்றாண்டில் இந்து மாகடலில் தனக்கான ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும் சீனாவிற்கு இலங்;கையில் நிகழ்ந்த இனப்படுகொலை யுத்தம் வரப்பிரசாதமாக அமைந்தது. சீனா ஆசியாவில் தலையெடுக்கும் முன்பு இலங்கை அரசு இந்திய ஆதிக்க அச்சத்திற்கு எதிராக குறிப்பாக பிரிதபிரித்தானிய மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளை நம்பிய துணையை நாடியது.

ஆனாலும் நீண்டகால நோக்கில் இந்தியாவை பகைப்பது மேற்குலகிற்கு பாதகமானது என்பதால் மேற்குலம் எச்சரிக்கை கலந்த ஆதரவே இலங்கை அரசுக்கு அளித்து வந்தது. ஆனால் தற்போது ஆசியப் பேரரசாக சீனா எழுந்துள்ள நிலையில் அதுவும் அது தனது இந்து மாகடல் ஆதிக்க நலனுக்காக நிபந்தனையற்ற ஆதரவை இலங்கை அரசிற்கு வழங்கக்கூடிய நிலையில் இந்தியாவை எதிர்கொள்ள வல்ல ஒரு சக்தியாக நீண்டகால நோக்கில் சீனாவை இலங்கை பார்க்கிறது.

ஆதலால் ஐ.தே.க, சு.க என்ற பழைய பனிப்போர்கால கட்சி வேறுபாடுகளைக் கடந்து இருகட்சிகளும் சீனாவை ஆதரிக்கவல்ல நிலையைக் கொண்டுள்ளன. இந்நிலையில் இந்த புதிய அரசியல் யாப்பில் மேற்குலகத்தை சமாளிக்கவல்ல வகையில் மனிதஉரிமைகள் சம்பந்தமான ஏற்பாடுகள் ஒருபுறமும் அதேவேளை சீனாவின் ஆதரவைப் பெற்று மேற்குலகையும், இந்தியாவையும் எதிர்கொள்வதற்கான பலத்தை நிலைநிறுவத்துவது இன்னொரு புறமும் இவற்றின் பின்னணயில் இனஒடுக்குமுறையை முன்னெடுப்பதற்கான யாப்பை பலப்படுத்துவதும் இன்னொருபுறமுமென முப்பரிமாணம் கொண்ட மூலோபாயத்தை இந்த புதிய யாப்பு கொண்டுள்ளது.

பிரித்தானியர் உருவாக்கிய டொனமூர், சோல்பரி யாப்புக்கள் காலனிய ஆதிக்கம் மற்றும் நவகாலனிய ஆதிக்கம் என்பனவற்றிற்குப் பொருத்தமாக உருவாக்கப்பட்ட நிலையில் சிங்கள தரப்பை திருப்திபடுத்துவதற்கேற்ற பெரும்பான்மை இனநாயக யாப்பு மரபை பிரித்தானியா வளர்த்து அதனை இலங்கையின் அரசியல் நடைமுறையாக்கினர்.

அந்த தளத்தில் அடுத்துவந்த முதலாவது குடியரசு அரசியல் யாப்பு பௌத்த மேலாதிக்கம், மற்றும் இருந்த இனஉரிமைகள் பற்றிய பழைய யாப்பின் ஏற்பாடுகளைப் பறித்தல் என்பனவற்றை செய்தது. இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு சட்டசபை ஆதிக்க வளர்ச்சிக்கு அப்பால் நிர்வாக ரீதியான ஆதிக்கத்தையும், இராணுவ கட்டமைப்பு புலனாய்வு ஆதிக்கத்தையும் வளர்த்து அவற்றை தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை அரசியல் யதார்த்தமாக்கியது

அப்பின்னணியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அரங்கேற்றப்பட்டு தமிழினம் பேரழிவிற்கு உள்ளாக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அவமானங்களையும், தடைகளையும் நீக்குவதற்கும் புதிய ஆசிய வல்லரசாக எழுந்துள்ளதும், உலக வல்லரசாக எழுவதுமான சீனாவுடன் கூட்டுச் சேருவதற்கும், இந்தியாவிற்கு எதிரான தமது அரணை சீனா வாயிலாக வளர்ப்பதற்கு ஏற்றதாகவும் ஒரு புதிய அரசியல் யாப்பு பற்றிய உத்திக்கு இலங்கை அரசு போய் உள்ளது.

இதில் வடக்கு-கிழக்கு இணைப்பற்ற தீர்வு என்பதன் வாயிலாக இனப்பிரச்சனைக்கான தனது ஒடுக்குமுறையை மேலும் திடமாக முன்னெடுக்கவும், வளர்ந்திருக்கும் இராணுவ கட்டமைப்பை தமிழர் மீதான ஆதிக்க சக்தியாக விரிவாக்கவும் ஏற்ற வகையில் இந்த யாப்பு உருவாகிறது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக் கொண்;டு தமிழருக்கு எதிரான இனஒடுக்குமுறையை அது இன்னொரு கட்டத்திற்கு முன்னெடுக்கிறது.

இப்பின்னணியில் வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பானது மேலும் இன அழிப்பை இலகுபடுத்துவதற்கேற்ற ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. இத்தகைய வடக்கு-கிழக்கு இணைப்பற்ற மாகாணசபை கட்டமைப்பு என்பதும் இன ஒடுக்குமுறைக்கான ஒரு முக்கிய கருவியாக்கப்பட்டிருப்பதை தமிழ்த் தலைவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை.

காலணி ஆதிக்க காலத்தில் இந்தியாவுக்கு எதிராக பிரித்தானிவுடன் கைகோர்த்து தமிழர்களைப் பலியெடுத்த சிங்கள ஆட்சியாளர்கள் பின்பு பனிப்போர் காலத்தில் இந்தியாவுக் கெதிராக அமெரிக்காவுடன்  கைகோர்த்து தமிழர்களைப் பலியெடுத்தனர். தற்போது சீனா ஆசியப்பேரரசாக வளர்ந்துள்ள நிலையில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் சவாலாக சீனாவை முன்னிறுத்தி தமிழர்களைப் பலியெடுக்கும் இன்னொரு சர்வதே ரீதியான தளத்திற்கு முன்னேறியுள்ளனர். ஆனால் தமிழ்த் தலைவர்கள் இவையெதிலும் உணர்வற்ற மேம்போக்கான அரசியல் வாதிகளாகவே காணப்படுகின்றனர்.

பேரரசாக எழுச்சி பெறும் சீனாவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி. அதனை வாய்ப்பான வகையில் இலங்கையில் முன்னிறுத்தி இந்தியாவையும், அமெரிக்காவையும் கட்டுப்படுத்தும் தந்திரத்தில் இலங்கை முன்னேறுவதனால் இதன்வாயிலாக தமிழருக்கான உரிமைகளை மறுப்பது இலங்கைக்கு இலகுவாகிறது.
மறுபுறம் சீனாவை இலங்கை முன்னிறுத்துவதனால் தமிழ்மக்களுக்கான உரிமை விடையத்தில் இந்தியாவையும், அமெரிக்காவையும் பின்தள்ளவும் இலங்கையால் முடிகிறது. இங்கு சீன – இந்திய ௲ அமெரிக்க முக்கோணப் போட்டியை இலங்கை முற்றிலும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது. மொத்தத்தில் இதற்கு தமிழர்களே முதற்பலியாகிறார்கள்.

இறுதி அர்த்தத்தில் தமிழர்கள் பலியாகுவது என்பது இலங்கை முழுவதிலும் சீனா மேலோங்குவதும் அதன் வாயிலாக தென்னாசிய மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா நீண்டகால அடிப்படையில் மேலாதிக்கத்திற்கான வலுவைப்பெறமுடிகிறது.

நடந்து முடிந்த இனப்படுகொலைப் பின்னணியில், இந்து மாகடலில் ஏற்பட்டிருக்கும் புதிய வல்லரச ஆதிக்கப் போட்டியின் பின்னணியில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் பேரம் பேசும் சக்தி வானளாவ உயர்ந்திருக்கிறது. அதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பயன்படுத்தி தமிழ்மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதற்குப் பதிலாக இப்பேரம்பேசும் சக்தியை ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கு இசைவாக அவர்களின் காலடியில் ஒப்படைத்துவிட்டு அடிதொழும் அரசியலால் தமிழ் மக்களின் எதிர்காலம் மீளமுடியாத அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லப்படுகிறது.
Share:
Read More

தமிழ் இல்லாமல் ஒரு மொழியா..?

இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நிகழும் மாநிலமாக இருப்பது தமிழ்நாடு. ஓரிடத்தில் உரிமை மீறப்படுகிறது என்றால் அங்கே ஒரு போராட்டம் வெடிக்கும். பரிணாம வளர்ச்சியில் உலகிற்கே முன்னோடியான இனம் இது. சம்பிரதாயம் என்ற வார்த்தைக்குள் சயின்ஸை வைத்த பூமி இது. சடங்குகள் வேறு, சம்பிரதாயங்கள் வேறு. மூட நம்பிக்கைகள் சடங்குகள் வரிசையில் வரும். அது இடைச்சொறுகலாக வந்தது. 


ஆனால் தமிழர்களின் பண்பாடு தொன்று தொட்டு வருவது. அறிவியலை தவிர வேறு எந்த பின்னணி காரணங்களும் இருக்காது. இன்றைக்கு இருக்கும் பல உலக மொழிகளுக்கு வேர் மொழியானது தமிழ். காலத்தின் கட்டாயம் நிரூபிக்க பல ஆதாரங்களை தேட வேண்டி இருக்கிறது. தற்போது கொரியா உலகையே எதிர்த்து போராடும் அளவிற்கு தற்சார்பு உடைய நாடாக மாறி இருக்கிறது என்றால், அங்கு தமிழ் கலாச்சாரமும் ஒரு வகையில் வேரூன்றி இருக்கிறது. நம்கிம் எனும் கொரியர் ஏறத்தாழ ஐந்தாயிரம் தமிழ்ச்சொற்கள் கொரிய மொழியில் உள்ளதாக கோவை செம்மொழி மாநாட்டில் தமதாய்வுக் கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார். 


அவரைத் தமிழ் கற்கத் தூண்டியது எது என்பதை அவரே விளக்குகின்றார். கனடாவில் கொரிய மொழி ஆசிரியராக அவர் பணியாற்றுகின்றார். ஒரு நாள் தொடர் வண்டியில் அவர் பயணிக்கும்போது ஒரு தமிழ்க் குடும்பத்தினர் தமிழில் பேசியதைக் கவனித்துள்ளார். அவர்களின் பேச்சில் பல சொற்களின் ஒலிப்புக் கொரிய மொழிச் சொற்களைப் போல இருந்துள்ளன. அவர்களிடம் பேசியபோது அவர்கள் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார்கள். பிறகுதான் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியுள்ளார்
Share:
Read More

இரகசியத்தை வெளிட்ட டொனால்ட்ரம் !

நேற்று திங்கட்கிழமை, ஜனாதிபதி மக்ரோன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை சந்தித்திருந்தார். அதன் போது பல முக்கிய பிரச்சனைகள் குறித்து உரையாடினார்கள். பிரான்சில் இடம்பெற்ற ஜூலை 14 நிகழ்வுகளில் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே. அதன் போது இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு ட்ரம்பினை வெகுவாக கவர்ந்திருந்தது. 


இதுபோன்ற அணிவகுப்பை தாம் முதன்முறை பார்த்ததாக அப்போது தெரிவித்திருந்தார். அதன் பின்னர், நேற்று இடம்பெற்றிருந்த சந்திப்பில் மீண்டும் அதை நினைவு படுத்தினார் ட்ரம்ப். ஜூலை 4 ஆம் திகதி அதே போன்றதொரு அணிவகுப்பை தாம் நிகழ்த்த உள்ளதாக தெரிவித்த ட்ரம்ப், 'ஜூலை 14 நிகழ்வை விட சிறந்ததாக நிகழ்த்த முயற்சி செய்கிறேன்!' குறிப்பிட்டார். 

அதன் பின்னர் இருவரும் சிரித்துக்கொண்டனர். தவிர, சந்திப்பில் ஈரானிய அணு ஒப்பந்தம் குறித்தும், பரிஸ் காலநிலை ஒப்பந்தம் குறித்தும் பல முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Share:
Read More

சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்குப் பரிந்துரை செய்ய வேண்டும் – கஜேந்திரகுமார்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை. இந்த அறிக்கையானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 ஒக்டோபர் 2015ல் நிறைவேற்றப்பட்டபோது, குறித்த தீர்மானத்திற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளுக்குமிடையில், பாரிய கவலைக்குரிய வேறுபாடுகள் காணப்படுவதாக நாம் எச்சரித்தோம். இதில், முக்கிய வேறுபாடானது, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக விசாரனை அறிக்கையானது கலப்பு நீதிமன்றத்தை அமைக்கக் விசேடமாகக் கோரியது. ஆனால், தீர்மானம் 30ஃ1 தனித்து சில வெளிநாட்டு பங்களிப்பை தெளிவற்ற முறையில் கோரியது. இது, நடைமுறை நோக்கில் ஒரு உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறையையே.
கலப்பு பொறிமுறையொன்றின் எத்தகைய அம்சங்களும் நிறுவப்படுவதை முற்றுமுழுதாக நிராகரிக்கும் நிலைப்பாட்டோடு, மேற்குறித்த வேறுபாட்டை சிறீலங்கா அரசாங்கம் அன்றிலிருந்து எடுத்துக்கூறி வருகிறது. இத்தகைய பின்னணியில், குறித்த தீர்மானத்தின் எத்தகைய முக்கியமான பகுதிகளை சிறீலங்கா அரசாங்கம் அமுல்படுத்த நிராகரித்ததோ, அதனை அமுல்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை இந்தப் பேரவை முப்பத்திநான்காவது கூட்டத்தொடரின் போது வழங்கியது. இத்தகைய பின்னணியில், போரினால் பெருவாரியாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொள்ள சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்தல் அல்லது தமிழ்மக்களுக்கான நீதியின் முக்கியமான அடிப்படைக் கூறுகளில் கவனம் செலுத்துவற்கான தற்காலிக சர்வதேச தீர்ப்பாயத்தை உருவாக்குதல் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் சபையும் மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் தற்போதைய ஆணையாளரும் அவருக்கு முன் பதவி வகித்த ஆணையாளரைப்போன்று, பொறுப்புக்கூறல் தொடர்பான வெளிநாட்டுப் பொறிமுறையொன்று உருவாக்குவது தொடர்பான அழைப்பினை வெளிப்படுத்த வேண்டும்.
Share:
Read More

தமிழத்தில் இல்லுமினாட்டியின் BIG BOSS மறைமுக திட்டம் அம்பலம்


Big boss vijay tv show  மறைமுக திட்டம். ஏன் இந்த நிகழ்ச்சி இதன் தாற்பரியம் என்ன ?  இதன் பிண்ணனி  என்பவற்றை அக்கு வேறு ஆணி வேறாக விளங்கி கொள்ள இங்கே 
மேலே உள்ள  காணொளியில் பதிவில் அவர்களின் மறை முக திட்டம்  சொல்லி இருந்தேன் .தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யம் குறைந்து சாதரண நிகழ்ச்சி போல ஆகிவிட்டது. அனைவரும் பார்த்துக்கொண்டிருந்த நிலை மாறி தற்போது விரும்பியவர்கள் மட்டும் பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது. காரணம், எவ்வளவு நேரம் தான் அந்த ஆறு பேரின் முகத்தை பார்த்துகொண்டிருப்பது. சலிப்பு தட்டும் டாஸ்குகள், 

காலியான பிக்பாஸ் வீடு என பரபரப்பு எதுவும் இன்று 100-வது நாளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது பிக் பாஸ். சரி விஷயத்துக்கு வருவோம், பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி மொழியில் தற்போது 11-வது சீசன் நடைபெற்றுகொண்டிருகிறது. இந்த நிழச்சியில் நடந்த நிகழ்வை பார்த்து தமிழ் பிக்பாஸ் நம்மை ஏமாற்றி விட்டது என புலம்பல் புராணம் பாடி வருகிறார்கள் இளசுகள். 

 என்ன காரணம் என்று பார்த்தால். ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சன்னி லியோனை விருந்தினராக கொண்டுவந்து கொட்டும் மழையில் நடனம் ஆட விட்டிருக்கிறது பிக்பாஸ் ஹிந்தி குழு. ஆனால், தமிழ் பிக்பாஸில் இப்படி எதுவும் செய்யாமல் ஏமாற்றிவிட்டார்களே என்று புலம்பி வருகிறார்கள் இளசுகள்
Share:
Read More
Older Posts → Home

Popular Posts

Blog Archive

எண்ணத்தின் வலிமை

தமிழில் தோன்றிய தத்துவஞானி யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியது “ எண்ணத்தை ஆராய்ச்சியிலும் , தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன் , மக...

Blog Archive